வீடியோ: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர்.. அழுகிய நிலையில் சடலமாக மீட்பு...

வீடியோ: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர்.. அழுகிய நிலையில் சடலமாக மீட்பு...


pullaveli-waterfall-ajai-pandiyan-accident-viral-video

நீர்வீழ்ச்சியில் தவறிவிழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மணலூர் ஊராட்சியில் உள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. கொடைக்கானல் ம‌லைப்ப‌குதிக‌ளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்மழையால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்களும், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்களும் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வந்துசெல்கின்றனர்.

Pullaveli waterfall

அதேநேரம், புல்லாவெளி நீர்வீழ்ச்சி சற்று ஆபத்து மிகுந்த பகுதியாக கூறப்படுகிறது. தண்ணீர் விழும் இடத்திலிருந்து 100 அடிக்கு அப்பால் சுமார் 1200 அடி பள்ளத்தாக்கு உள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், ஆபத்தை உணராமல் சிலர் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டிய‌ன் என்ப‌வர் கடந்த வாரம் தனது நண்பர் கல்யாண சுந்தரம் உடன் புல்லா வெளி  நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளார். நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த அஜய் பாண்டிய‌ன் திடீரென கால்தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததில், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு மாயமானார்.

நீர்வீழ்ச்சியில் மாயமான அஜய் பாண்டியனை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடிவந்தனர். சுமார் 1 வாரமாக தொடர்ந்த மீட்பு பணியில் 7 வ‌து நாளான‌ நேற்று ல்லாவெளி அருவி ஆற்று ஓர‌ப்ப‌குதியில் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் அஜ‌ய் பாண்டிய‌னின் உட‌ல் ச‌ட‌ல‌மாக‌ மீட்கப்பட்டுள்ளது.