நடுவழியில் பிரசவம்; தாய்-சேயை நலமுடன் பாதுகாத்த அவசர ஊர்தி ஓட்டுநர், மருத்துவ குழுவினர்.!pudukkottai-women-delivery-in-ambulance

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசர்குளம் பகுதியில் வசித்து வருபவர் சத்யா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த சத்யாவுக்கு, இன்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து, குடும்பத்தினர் அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த நிலையில், நிகழ்விடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்; பொருளாதார முன்னேற்றத்தில் அடியெடுத்துவைக்கப்போகும் பெண்கள்.!

நடுவழியில் பிரசவம்

ஆனால், வழியிலேயே சத்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனடியாக அவசர ஊர்தியிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. பிரசவத்தில் சத்யாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. 

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இரண்டு உயிர்களையும் காப்பாற்றிய அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

இதையும் படிங்க: ஹாய் அனுப்பாதீங்க; வேண்டுகோள் வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்..! காரணம் இதுதான்..!