6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! விக்கல் வந்து செத்ததாக கூறிய நாத்தனார்கள்..! ஆனால்... விசாரணயில் அம்பலமான அதிர்ச்சி உண்மை! புதுக்கோட்டையில் நடந்த பகீர் சம்பவம்..!!!
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சந்தியா (21), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வீட்டில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சந்தியாவை கொலை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவரிடம் கூறிய தகவலால் ஏற்பட்ட தகராறு
போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவின் நாத்தனார் தொடர்பான தகாத உறவு குறித்து அவர் தனது கணவரிடம் கூறியதாக தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சந்தியாவை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே வெளியே வராதீங்க..! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!
தொலைக்காட்சி சத்தத்தை அதிகரித்து கொலை
மாமியார் மற்றும் நாத்தனார்கள் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சந்தியாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் தொலைக்காட்சி சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு, துப்பட்டாவால் சந்தியாவின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்துள்ளார்.
விக்கல் ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகம்
சந்தியா விக்கல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் நாடகமாடியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் உறவினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு சந்தேகத்துக்குரிய தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பென்ட்ரைவில் கிடைத்த வீடியோ! தோண்ட தோண்ட வெளிவரும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்! ஜெம் வீரமணி பாலியல் வழக்கு 4 லிருந்து 5 ஆக உயர்வு..!!!