BREAKING: சற்று முன்... மோன்தா புயல் எச்சரிக்கை! பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.!!



puducherry-enam-holiday-announcement

வானிலை மாற்றங்களால் தென் மாநிலங்களில் கல்வி மற்றும் பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் சூழலில், புதுச்சேரி ஏனாம் பகுதியில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மோன்தா புயல் தாக்கம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளின் காரணமாக புதுச்சேரி அரசால் ஏனாம் பகுதியின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27 முதல் 29 வரை இந்த விடுமுறை அமலுக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்! புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக் - 22) விடுமுறை அறிவிப்பு!

மோன்தா புயல் எச்சரிக்கை

ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா அருகே கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் நிலை தொடர்வதால், புதுச்சேரி ஏனாம் பகுதிக்கும் வானிலைத் துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரை

ஆபத்துகளை முன்னெச்சரிக்கும் வகையில், அரசு கல்வி நிறுவனங்களை மூட தீர்மானித்துள்ளது. இந்த மூன்று நாட்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மோன்தா புயலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த உடனடி முடிவு எடுக்கப்பட்டிருப்பது பெற்றோர்களும் உள்ளூர்வாசிகளும் வரவேற்று வருகின்றனர்.

 

இதையும் படிங்க: வங்க கடலில் உருவாகும் "மோந்தா" புயல்! இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... வானிலை மையம் அறிவிப்பு!