வாவ் சூப்பர்...இன்று முதல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி.!

வாவ் சூப்பர்...இன்று முதல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி.!


Public is allowed to go marina beach

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை வேகமாக பரவியதை அடுத்து கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை அறிவித்தது. மேலும் வெள்ளி,சனி, ஞாயிறு கிழமைகளில் பொது இடங்களில் மக்கள் கூடுவதையும், வழிபாட்டு தளங்களுக்கு மக்கள் செல்லவும் தடை விதித்தது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை ரத்து செய்துள்ளது. மேலும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

marina beach

அதன்படி இன்று முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்ல அனுமதி அளித்துள்ளது. கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.