தமிழகம்

பெண்களை குறிவைத்து கொடூர செயலை செய்த ‘சைக்கோ’! திருப்பூரை நடுங்க வைத்த சம்பவம்!

Summary:

psycho killed womens

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஏரிப்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜோதிலட்சுமி. 65 வயது நிரம்பிய இவர் தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

ஏரிப்பாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்கள், நள்ளிரவில் வீட்டின் திண்ணையிலும், வீதியிலும் படுத்து உறங்குவது வழக்கம். இந்தநிலையில் நேற்று ஜோதிலட்சுமி தனது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த தள்ளுவண்டியில் படுத்து தூங்கினார். அவரது கணவர் மற்றும் மகன், மருமகள் மற்றும் குழந்தைகள் வீட்டில் படுத்து தூங்கினர். 

 இந்தநிலையில் வாசலில் படுத்திருந்த, மூதாட்டி ஜோதிலட்சுமியின் அருகே சென்ற மர்மநபர் ஒருவர், அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதனையடுத்து சத்தம் கேட்டு எழுவதற்குள் மூதாட்டி ஜோதிலட்சுமியின் மருமகள் கலைவாணி தலையிலும், மற்றொரு கல்லைப் போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மர்மநபர். 

இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த ஜோதிலட்சுமி மற்றும் கலைவாணி ஆகியோரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

நள்ளிரவு நேரத்தில் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டதால், இதில் சைக்கோ வாலிபர் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் உடுமலையில் வைத்து சைக்கோ கொலையாளி ஆரோக்கியராஜ் என்பவரை கைது செய்தனர்.


Advertisement