தமிழகம்

சேலையில் அழகு... சேலை இல்லைன்னா இன்னும் அழகு.! ஆசிரியர் ராஜகோபாலனின் லீலைகள் அம்பலம்.!

Summary:

சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராஜகோப

சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பின் போது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டதாகவும், ஆபாசமாக மெசேஜ் செய்ததாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பலரும் அவருக்கு  கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதனை தொடந்து போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு போக்சோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதில் அழிக்கப்பட்ட தகவல்களை ரெக்கவரி சாப்ட்வர் மூலம் மீட்டெடுத்துள்ளனர். அதில் இருந்த தகவல்கள் குறித்து வெளியான தகவலில், ராஜகோபாலன் வாட்ஸ்அப்பில் மாணவிகளின் செல்போன் நம்பர்களுக்கு மெஸேஜ்களை அனுப்பி சேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டிவந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு சில மாணவிகளிடம் பாடத்தை தவிர்த்து அவர்களின் அழகை வர்ணித்து ஆபாசமாக மெஸேஜ்களை செய்ய தொடங்கியிருக்கிறார். இரவு நேரங்களில் மாணவிகளிடம் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் பேசி வந்திருக்கிறார். இரட்டை அர்த்தங்கள் கொண்ட படங்கள், குறுஞ்செய்திகளை மாணவிகளுக்கு அதிகளவில் ராஜகோபாலன் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஒரு மாணவியின் அழகை வர்ணித்த ராஜகோபாலன், நீ இந்தச் சேலையில் அழகாக இருக்கிறாய். ஆனால் சேலை அணியாமல் இருந்தால் இதைவிட அழகாக இருப்பாய் என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார். அவர் மாணவிகளுக்கு அனுப்பிய மெசேஜ் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement