தமிழகம்

கணவன் கண்முன்னே துடி துடித்து இறந்த நிறைமாத கர்ப்பிணி பெண்..! கண் கலங்க வைக்கும் சம்பவம்..

Summary:

Pregnant women died in road accident at palani

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இரவிமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (30). இவரது மனைவி மாரியம்மாள் (27). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில் மாரியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால், பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்றுள்ளார்.

கணவன் - மனைவி இருவரும் கரடிகூட்டம் என்னும் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்புறமாக வந்த கார் ஓன்று இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் கணவன் - மனைவி இருவரும் காரில் மாட்டி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் மாரியம்மாள் சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளார்.

படுகாயத்துடன் மீட்கப்பட்ட மகுடீஸ்வரன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் மாரியம்மாளுக்குள் குழந்தை பிறக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement