கடவுளே! இப்படியெல்லாம் சாவு வந்தா என்னத்தான் பண்றது? சந்தோசமாக பேட்மிண்டன் விளையாடிய தந்தை - மகன்! நொடியில் சரிந்து விழுந்த 23 வயது மகன்... மருத்துவமனையில் குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பெரும் சோகம்...!!!



porur-23-year-old-youth-dies-of-heart-attack

சென்னை போரூர் பகுதியில் தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் சிவ சூர்யா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகன் கண்முன்னே சரிந்து விழுந்ததைப் பார்த்த தந்தை கௌதமன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் மயக்கம்

போரூரைச் சேர்ந்த சிவ சூர்யா, தனது தந்தை கௌதமனுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். இருவரும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சிவ சூர்யா மயங்கி கீழே விழுந்துள்ளார். என்ன நடந்தது என்று புரியாமல் தந்தையும் குடும்பத்தினரும் பதறினர்.

இதையும் படிங்க: திடீர் மாரடைப்பு.. 25 பயணிகளுக்கு கடவுளாக மாறிய ஓட்டுநர்.. கடைசி நொடியிலும் காப்பாற்றிய உயிர்கள்!

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற குடும்பத்தினர்

இதையடுத்து சிவ சூர்யாவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

23 வயதில் மாரடைப்பால் உயிரிழப்பு

மருத்துவர்களின் பரிசோதனையில், மாரடைப்பு காரணமாக சிவ சூர்யா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இளம் வயதில், அதுவும் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோதே எதிர்பாராத வகையில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயது இளைஞர் உயிரிழந்த தகவல் போரூர் பகுதியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: தமிழகத்தில் அதிவேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்! சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்.. மீண்டும் முகக்கவசம் அணிய அறிவிப்பு...!!!