அரசியல் தமிழகம்

திமுக துணை பொது செயலாளர் மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் திமுகவினர்.!

Summary:

திமுக துணைப்பொதுச்செயலாளர் பொன்முடி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி நேற்று இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று வெளிநடப்பு செய்தார். 

இதனையடுத்து அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பித்தப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


Advertisement