
pongal festival game
ஒரு கிராமத்தில் பொங்கல் விழாவன்று வித்தியாசமான முறையில், கண்ணை கட்டி வாத்து பிடிக்கும் விளையாட்டுப்போட்டி நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பொங்கல் விழாவன்று ஊர் பொதுமக்கள் விதவிதமான விளையாட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம். இந்தநிலையில் ஒரு கிராமத்தில் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் விழாவில், பெண்கள், சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டும் பல ஊர்களில் நடத்தப்பட்டன. அந்த விழாவில் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டும் பந்தயம், இசை நாற்காலி, எலுமிச்சை பழத்தை ஸ்பூனில் வைத்து ஓடுதல், சாக்கு போட்டி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல், பானை உடைத்தல், பலூன் உடைத்தல், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் ஒரு கிராமத்தில் வித்தியாசமான முறையில், கண்ணை கட்டி வாத்து பிடிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. அதில் கிராம மக்கள் சுற்றிவர அமர்ந்து வயிறு குலுங்கி சிரித்தபடி அந்த விளையாட்டு போட்டியை ரசித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement