
புதுச்சேரியில் கொரோனாவின் 2-வது அலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவல
புதுச்சேரியில் கொரோனாவின் 2-வது அலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மக்களும் மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் புதுச்சேரியில் நடைமுறைக்கு வந்தன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலால் புதுவையில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுபான கடைகள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Advertisement
Advertisement