அட கொடுமையே!! இவரையும் விட்டுவைக்கலையா!! பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரானா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி..
அட கொடுமையே!! இவரையும் விட்டுவைக்கலையா!! பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரானா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி..

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் கொரோனாவால் அன்றாடம் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதில் பலரது நிலைமை மோசமடைந்து உயிரிழப்புவரை செல்கிறது. அந்த வகையில் இன்று காலை பிரபல தமிழ் சினிமா நடிகர் பாண்டு அவர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். இது ஒருபுறம் இருக்க, தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.