
திடீரென வெடித்த வேனின் டயர்.!! காவலர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்..!!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் நேற்று முன் தினம் (அக் 30) தேவர் ஜெயந்தி என்பதால், நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து தேவர் ஜெயந்தி விழா சிறப்பான முறையில் நடைப்பெற்று முடிந்த நிலையில், பாதுகாப்பு பணி முடிந்து திரும்பிய காவலர்கள் வேன், திருச்சி துவரங்குறிச்சி அருகே கல்லுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேனின் டயர் திடீரென வெடித்தது. இதில் வேன் முற்றிலுமாக கவிழ்ந்த நிலையில், பாதுகாப்பு பணிக்காக வந்த 7 பேர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
Advertisement
Advertisement