எனது கணவனை உயிரோடு தாங்க..! கதறி அழுத சுப்பிரமணியனின் மனைவி!

எனது கணவனை உயிரோடு தாங்க..! கதறி அழுத சுப்பிரமணியனின் மனைவி!


police supramani wife crying in husband funeral

சிறுவயதிலிருந்தே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தவர் சுப்பிரமணியன். இதற்காக தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னுடைய ஆசைப்படி போலீஸ் அதிகாரியாகவும் ஆனார். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியைச் சேர்ந்த குற்றவாளி துரைமுத்துவைப் பிடிப்பதற்காக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றனர் அதில் சுப்பிரமணியனும் சென்றுள்ளார். 

அங்கு காவலர்கள் வருவதை பார்த்த குற்றவாளி தப்ப முயன்ற போது,  காவலர்கள் தொடர்ந்து சென்றனர். அவரைக் கைது செய்ய முயன்றபோது, காட்டு பகுதியில் இருந்த குற்றவாளி, தன்னைப் பிடிக்க வந்த  காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளான். அதில் துரதிஷ்டவசமாக சுப்பிரமணியன் பரிதாபமாய் பலியானார்.

police

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சுப்பிரமணிக்கு திருமணமாகி 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறாராம், நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு நிகழ்விற்கு வந்த டிஜிபி திரிபாதி, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் எம்.எல்.ஏ. சண்முகநாதனிடம்  என் கணவரை உயிருடன் தாருங்கள், எனக்கு அவர் தான் வேண்டும் என அழுதுள்ளார் சுப்பிரமணியனின் மனைவி. அவர் அங்கு கதறியது பார்ப்போரின் கண்களை கசியவைத்தது.