கல்லூரி மாணவிகள் பேருந்தை மறித்து ஓட்டுனருக்கு அடி, உதை.. சங்கிலி பறிப்பு.. உள்ளூர் ரௌடிகள் வெறிச்செயல்.!

கல்லூரி மாணவிகள் பேருந்தை மறித்து ஓட்டுனருக்கு அடி, உதை.. சங்கிலி பறிப்பு.. உள்ளூர் ரௌடிகள் வெறிச்செயல்.!


Police searching 2 criminals

சாத்தான்குளம் அருகே கல்லூரி மினி பேருந்து ஓட்டுநர் உள்ளூர் ரவுடியால் தாக்கப்பட்ட நிலையில், ரவுடிக்கு எதிராக கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அரசு கல்லூரியில் மாணவிகளை ஏற்றுச்சென்ற மினி பேருந்தை அங்குள்ள கிராமத்தைச் சார்ந்த உள்ளூர் ரவுடிகள் இருவர் மறித்து இருக்கின்றனர். 

மினி பேருந்தின் ஓட்டுநராக இருந்த கிளிண்டனை பேருந்து கீழே இறக்கி தாக்கி, அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, மாணவிகளும் சாலையில் இறங்கி ஓட்டுநருக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். 

இதனைக்கண்டு உள்ளூர் பஞ்சாயத்துகாரர்கள் மாணவிகளிடம் தகராறு செய்யவே, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தங்க சங்கிலியை பறித்து சென்ற உள்ளூர் ரவுடிகள் இருவரை தேடி வருகின்றனர்.