தமிழகம்

சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி!. விசாரணையில் சிறுமி அளித்த அதிரவைக்கும் தகவல்!.

Summary:

police officer sexual torture to young girl

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர் மாதவரம் காவல் நிலையத்தில் ஸ்பெஷல் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு வில்லிவாக்கம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமி கதறி அழுததால், குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அதன் பின் சிறுமியிடம் அவர்கள் கேட்ட போது, சிறுமி சொன்ன தகவலால் ஆத்திரமடைந்த அவர்கள், அவரை விரட்டிச் சென்று பிடித்து அடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரை அருகிலிருக்கும் வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்த போது, போலீசார் அவர் மீது புகார் ஏதும் பெறாமலும், வழக்கு பதிவு செய்யாமலும் விட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த தகவலை உடனடியாக உயரதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவல் நிலைய குழந்தை நல அலுவலர் மூலம் விசாரணை நடத்தியதில், கடந்த 4 மாதமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளரை பிடித்து விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாதுகாக்கும்  வேலியை போல் இருக்கும் பாதுகாவலர்கள் இவ்வாறு செய்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement