வீட்டிற்குள் பிணமாக தாய், மகன்.. சக்காளத்தி சண்டையில் உயிருடன் எரித்து கொலை?.! சந்தேக வலையில் 3வது மனைவி..!
வீட்டிற்குள் பிணமாக தாய், மகன்.. சக்காளத்தி சண்டையில் உயிருடன் எரித்து கொலை?.! சந்தேக வலையில் 3வது மனைவி..!

பூட்டிய வீட்டிற்குள் தாய் மற்றும் மகன் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன். இவர் ஒரு நாடகக் கலைஞர். இவரது மனைவி கமலா மற்றும் மகன் குரு. இந்த நிலையில், செந்தாமரைக்கண்ணனின் மனைவி மற்றும் மகன் இருவரும் பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடைப்பதாக கல்லாவி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் ஊத்தங்கரை காவல்துறை கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் தலைமையிலான கல்லாவி இன்ஸ்பெக்டர், பத்மாவதி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது விசாரணையில், செந்தாமரை கண்ணனுக்கு மூன்று மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டாவது மனைவி கமலா மற்றும் மூன்றாவது மனைவி சத்யா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சத்யா இவர்கள் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.