தமிழகம்

பட்டப்பகலில் ஆடை இல்லாமல் நடந்து சென்ற இளம் பெண்! அன்னை தெரசாவாக மாறிய சென்னை போலீஸ்!

Summary:

police help to young women

சென்னையில் ஆடையின்றி இளம்பெண் ஒருவர் சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை ராயபேட்டை பீட்டர்ஸ் ரோட்டில் உள்ள நியூ காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த செவ்வாய் கிழமை மதியம் 2 மணி அளவில், ஒரு இளம் பெண் ஆடை இல்லாமல், தடுமாறிய நிலையில் நடந்து சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராயபேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர் வைத்திருந்த மாற்று சட்டையை அந்த இளம் பெண்ணிற்கு அணிவித்து அருகில் இருந்த பெண்களின் உதவியுடன் துப்பட்டாவை போர்த்தி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
 
அந்த பெண் அவ்வாறு வந்ததற்கான கரணம் குறித்தும், யாரேனும் வன்கொடுமை செய்துள்ளனாரா என்றும் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய பின் முழுவிவரமும் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Advertisement