சென்னை காவல்துறையைச் சேர்ந்த 40 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம்!

சென்னை காவல்துறையைச் சேர்ந்த 40 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம்!


Police donate blood plasma at Chennai's Rajiv Gandhi General Hospital

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக இருந்து பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்த ஒரு சில நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.


இந்நிலையில் சென்னை காவல்துறையைச் சேர்ந்த 40 காவலர்கள்  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இந்த நிகழ்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.