சட்டவிரோதமாக அதிக விலையில் சூடுபிடித்த மது வியாபாரம்! அடித்து நொறுக்கிய போலீசார்!

சட்டவிரோதமாக அதிக விலையில் சூடுபிடித்த மது வியாபாரம்! அடித்து நொறுக்கிய போலீசார்!


Police damaged alcohol bottle

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதிகளில்
சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது பாட்டில்களை கைப்பற்றி அனைத்தையும் உடைத்து ஊற்றியுள்ளனர் வடகாடு போலீசார்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் உயிர் இழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு ஊரடங்கு சற்று கடுமையாக்க பட்டதால் கொரோனா பரவல் சற்று தடுக்கப்பட்டது.

police

இந்த நிலையில் நாடுமுழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள அணைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டது. ஒரு சிலர் இதனை சாதகமாக பயன்படுத்தி அதிக விலையில் மதுவை விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும் மது விற்பனையை தடுத்து நிறுத்தினர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு போலீசாருக்கு மது விற்பது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது பாட்டில்களை கைப்பற்றி அனைத்தையும் உடைத்து ஊற்றியுள்ளனர். இந்தநிலையில் ஆலங்குடி மற்றும் வடகாடு சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.