தமிழகம்

நீங்க டாஸ்மாக்கை மூடினால் எனக்கென்ன.? அசால்டாக 1000 லிட்டர் சாராய ஊறல்.! இறுதியில் கெத்து காட்டிய போலீசார்.!

Summary:

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் பல இடங்களில் க

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் பலர் சிக்கினர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வருடம் போடப்பட்ட ஊரடங்கின்போது, கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் அதிகப்படியானோர் போலீசாரிடம் சிக்கினர். இந்தநிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் தலை தூக்கியுள்ளது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் கல்வராயன்மலை அடிவாரம் மட்டப்பாறை கிராம வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து அந்த வனப்பகுதியின் ஒரு இடத்தில சாராயம் காய்ச்சுவதற்காக 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். அங்கிருந்த சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Advertisement