தமிழகம்

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் எஸ்ஐ-யை தாக்கிய காவலர்! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

Summary:

police attacked SI


புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். காவலர் ஜாகிர் உசேனுக்கும், அவரது மனைவிக்கும் இடையேயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி மனைவி இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்தநிலையில் காவலர் ஜாகிர் உசேன் அவரது மாமனார் வீட்டிற்க்கு சென்று மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த மாமனாரையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதுதொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு,  வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார், காவலர் ஜாகீர் உசேனை தேடி வந்தனர். இந்தநிலையில் மதுபோதையில் சொந்த ஊரான முத்துபட்டினத்தில் அவரின் தாய் மற்றும் உறவினரோடு ரகளையில் ஈடுபட்டுள்ளார் ஜாகிர் உசேன். 

அந்த சமயத்தில், அந்த வழியாக வந்த வல்லத்திரக்கோட்டை காவல்நிலைய எஸ்ஐ பாலசுப்பிரமணியன், ஜாகிர் உசேனை தடுத்து  நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த ஜாகிர், பாலசுப்பிரமணியன் கன்னத்தில் அறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் தப்பி ஓடிய ஜாகிரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement