தமிழகம்

டாஸ்மாக் கடையின் சுவற்றில் ஓட்டையை போட்டு மதுபாட்டில்களை ஆட்டையை போட்ட நபர்கள்.!

Summary:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரியில் கடந்த வாரம் டாஸ்மாக் மதுபானக் கடையின்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரியில் கடந்த வாரம் டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான 48 பெட்டி மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டுள்ளது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில், மர்ம நபர்கள் டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவற்றில் துளையிட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 567 மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து கள்ளச்சந்தையில் சில்லறையில் மதுபாட்டில் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மணிகண்டன் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அவரிடம் 206 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மது பாட்டில்கள் அனைத்தும் ரத்தினகிரி அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையில் திருடியதாக மணிகண்டன் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த செயலுக்கு சந்தானம் மற்றும் ராமதாஸ் ஆகிய இருவர் உடந்தை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement