தமிழகம்

14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்! அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

Summary:

police arrest young man in posco

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வட்டத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமாரி, இவர் மும்பையில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து யாரிடமாவது வெளியே கூறினால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாகவும் சிறுமியை இளைஞர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அந்த கொடூர செயலில் ஈடுபட்ட  இசக்கிமாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement