திருச்சி அருகே கொடூரம்... 69 வயது மூதாட்டி படுகொலை.!! தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் உட்பட 4 பேர் கைது.!!police-arrest-5-people-in-connection-with-the-murder-of

திருச்சி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் நபர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மூதாட்டி மர்ம மரணம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் கல்யாணி. 69 வயதான இவ்வாறு கடந்த ஜூலை மூன்றாம் தேதி தனது வீட்டின் சமையலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் கல்யாணி அணிந்திருந்த நகைகளும் திருடு போயிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணப்பாறை டிஎஸ்பி மரியமுத்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

tamilnadu

காவல்துறையிடம் சிக்கிய தண்ணீர் கேன் போடும் நபர்

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மூதாட்டி வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபரான மு.கேஷவன்(28) என்பவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! போக்சோவில் கைது செய்யப்பட்ட 41 வயது தந்தை.!!

கொலையாளிகள் கைது

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கேஷவன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நேற்று கேஷவனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கேஷவனின் கூட்டாளிகளான பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருச்சி அருகே பயங்கரம்... முசிறியை அதிர வைத்த இரட்டை கொலை.!! காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி.!!