"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
#Breaking: முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பாமக அன்புமணி வாழ்த்து.. என்ன சொன்னார் தெரியுமா?..!
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் 69 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நேற்று அவரின் நூல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இன்று அவரின் பிறந்தநாளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறப்பித்து வருகின்றன. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 69-ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்க்கை சிறக்க வேண்டும்; அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 69-ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்க்கை சிறக்க வேண்டும்; அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 1, 2022