தமிழகம்

ஆத்தாடி..! வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை.! பேரதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

Summary:

பெட்ரோல் விலை லிட்டர் 92.25 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டர் 85.63 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 92.25 ரூபாய் எனவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 85.63 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11வது நாளாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement