தமிழகம்

ஆத்தாடி..! பெட்ரோல் விலை உச்சகட்ட உயர்வு.! கடும் வேதனையில் வாகன ஓட்டிகள்.!

Summary:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் வி

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. 

ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. இதனால், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.91.98-க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.85.31-க்கும் விற்பனை ஆகிவருகிறது. பெட்ரோல் விலை உச்சகட்ட உயர்வால் வாகன ஓட்டிகள் வேதனையடைந்துள்ளனர்.


Advertisement