பெட்ரோல் டீசல் விலை உயர்வு! இன்றைய விலை நிலவரம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு! இன்றைய விலை நிலவரம்!


Petrol diesel price increased

சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்துள்ளது, டீசல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிரனயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. 

petrol

அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.81 ஆகவும், அதேபோல் டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் விற்கப்படுகிறது.

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.