தமிழகம்

ஆத்தாடி.! கடும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.! வரலாறு காணாத உச்சம்.!

Summary:

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. அந்தவகையில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

இந்த வருடத்தில் பெட்ரோல் விலை உச்சகட்டமாக உயர்ந்து பொதுமக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. பெட்ரோல் விலை உயர்ந்தநிலைக்கு சென்று குறையாமல் சமீப தினங்களாக ஒரே விலையில் விற்கப்பட்டது. இந்த கொரோனா சமயத்தில் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும்நிலையில் பெட்ரோல் விலை உச்சகட்ட உயர்வை சந்தித்து வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.99-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 96.23 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement