தமிழகம்

பலரும் வைத்த கோரிக்கை.! 24 நாட்களுக்குப் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை.!

Summary:

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த வருடத்தில் பெட்ரோல் விலை உச்சகட்டமாக உயர்ந்து கடந்த 24 நாட்களாக ஒரே விலையில் இருந்துவந்தது.

தேர்தல் நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை பலரும் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 24 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் குறைந்து ரூ.92.95-க்கும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.86.29-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


Advertisement