தமிழகம்

பெரியார் சிலையை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கத்தாழைமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், பெரியார் சிலைக்

கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கத்தாழைமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு  அருகே உள்ள  சமத்துவபுரத்தில் பெரியாரின் வெண்கல சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று காலை அப்பகுதியில் இருந்த பெரியார் சிலையின் கழுத்தில் இருந்த டயர்களை அகற்றி, தீயை அணைத்து பெரியார் சிலையை சுத்தப் படுத்தினர். மேலும், இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, பெரியார் சிலை முன்பு தரையில் அமர்ந்து அப்பகுதி மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினர். மர்ம நபர்கள் பெரியார் சிலையை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Advertisement