டிராக்டரில் பயணித்த 16 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாப மரணம்; பெற்றோர் கண்ணீர்.!



Perambalur 16 Age Minor Boy Died accident 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகுடல் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கராசு. இவரின் மகன் தர்மராஜ் (வயது 16). சிறுவன் நேற்று மாலை நேரத்தில் தனது நண்பர்களுடன் இருந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் சிறுகுடல் - வாலிகண்டாபுரம் சாலையில் இருக்கும் வயலில் டிராக்டரில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தனர். 

Perambalur

அப்போது, டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவே, வாகனத்தில் பயணம் செய்த தங்கராஜுவின் மகன் தர்மராஜ் கீழே விழுந்து காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருவத்தூர் காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.