திடீரென ரோட்டில் இறங்கி போராடிய மக்கள்!.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!People protest on demanding money for vote

ஓட்டுக்கு பணம் தராததால் சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள அம்மன் நகர் பகுதியில் மக்கள் சிலர் திடீரென நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விஷயம் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வரவே, போலீசாரை கண்ட மக்கள் சிதறி அடித்து ஓடினர். பின்னர் அங்கிருந்த ஒருசிலரை கைது செய்த போலீசார், மாறியலுக்குக்கான காரணம் குறித்து விசாரித்தபோது அவர்களுக்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, குறிப்பிட்ட பகுதியில் அரசியல் கட்சியினர் சிலர் பணம் கொடுப்பதற்காக வந்ததாகவும், ஆனால் தங்களுக்கு பணம் கொடுக்காமல் சிறிது நேரத்தில் அடுத்த பகுதிக்கு சென்றுவிட்டதாகவும், இதனை கண்டித்து 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பொதுமக்கள் தங்கள் ஓட்டுக்கு வெளிப்படையாக பணம் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.