#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
எங்களோட மண்ணும் அதுல விளையுற பொன்னும் போதும்; எங்க மண்ணுல கை வெக்கறது அரசாங்கமா இருந்தாலும்!...: பரந்தூர் மக்கள் போர்கொடி..!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் விமானநிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு சந்தை மதிப்பிலிருந்து 3½ மடங்கு கூடுதல் பணம், குடும்பத்தில் படித்தவருக்கு அரசு வேலை என வாக்குறுதியாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பா.ம.க தலைவரும் மாநிலங்களைவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அந்த பகுதி மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் அரசு அளித்துள்ள வாக்குறுதிகளும் வேண்டாம், விமான நிலையமும் வேண்டாம் என்று பரந்தூர் கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- நிம்மதியாக இருக்கவிடுங்கள், நாங்கள் விமான நிலையம் வேண்டாம் என்று பலமுறை சொல்லிவிட்டோம். இப்போது அரசு அளிக்கும் வாக்குறுதியை எதிர்பார்த்து நாங்கள் இல்லை. கூடுதல் பணமும் எங்களுக்கு வேண்டாம். நீங்கள் தரும் வேலையும் எங்களுக்கு வேண்டாம்.
எங்கள் ஊரில் இருக்கும் தண்ணீரும், காற்றும் மட்டும் எங்களுக்கு போதும். வேண்டுமென்றால் நீங்கள் கொடுத்த ரேஷன் கார்டைகூட திருப்பிக் கொடுத்து விடுகிறோம். எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். விமான நிலையத்தை வேறு எங்கேயாவது அமைத்துக்கொள்ளுங்கள்.
உயிரைவிட்டாலும் விடுவோமே தவிர, எங்கள் மண்ணை விடமாட்டோம். இங்குள்ள மனைகள், வீடுகள் எங்களுடைய உழைப்பால் வந்தது. இதனை இந்த அரசாங்கமா எங்களுக்கு வாங்கி கொடுத்தது?. எங்களுடைய மாமன், மச்சான் உறவுகள் எங்களுக்கு திருப்பி கிடைக்குமா?. விமான நிலையம் எங்களுக்கு வேண்டாம், அதனால் கிடைக்கும் பணமும், வேலையும் எங்களுக்கு வேண்டவே வேண்டம். என்ன சொன்னாலும் நாங்கள் இந்த இடத்தை விட்டு போகமாட்டோம் என்று கூறியுள்ளனர்.