தமிழகத்திற்கு பெருமை தந்த மாரியப்பனின் தம்பி காதல் திருமணம்.. காவல் நிலையத்தில் தஞ்சம்.!



Paralympics Gold Medalist Mariyappan Brother Gopi Love Married College Girl

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்று இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவரின் சகோதரர் கோபி (வயது 24). 

பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரின் மகள் பவித்ரா (வயது 20). கோபியும் - பவித்ராவும் காதலித்து வந்த நிலையில், பவித்ரா சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி வருடம் பயின்று வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. 

Paralympics

இதனால் காதலுக்கு பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டது. மகளை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த பவித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது.
 
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், காதல் ஜோடி விபரத்தை கூறி தஞ்சம் புகுந்ததால் இருதரப்பு பெற்றோரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பவித்ராவை கோபியுடன் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இருதரப்பையும் அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.