பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
#Breaking: 9 காளைகளை அடக்கி மாடுபிடிவீரர் வீரமரணம்.. காளை முட்டி தூக்கியதில் பரிதாபம்..!

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15 ஆம் தேதி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
போட்டியில் மாடுபிடி வீரர்கள் விறுவிறுப்பான கலந்துகொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர். காளையர்களுக்கு அடங்க மறுக்கும் காளைகளும் திமிரி செல்கின்றன.
இந்த நிலையில், இளம் மாடுபிடி வீரரான அரவிந்த்ராஜ் என்பவர் காளைகளை அடக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக காயம் அடைந்தார்.
9 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தில் இருந்தவரை மாடு முட்டியதில் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.