பட்டமளிப்பு விழாவில், பாட்டுப் பாடிய மு.க.ஸ்டாலின்.. என்ன பாடல் தெரியுமா.?!

பட்டமளிப்பு விழாவில், பாட்டுப் பாடிய மு.க.ஸ்டாலின்.. என்ன பாடல் தெரியுமா.?!


p-sushila-was-awarded-an-honorary-doctorate-by-the-chie

தமிழ்நாடு  முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக் கொண்டார். தமிழகத்தின் முதலமைச்சர் வேந்தராக பதவி வகிக்கும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை நடந்தது.

stalin

இந்த பட்டமளிப்பு விழாவில் பாடகி பி.சுசிலாவுக்கு கௌரவ முனைவர் பட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது, 1962 ஆம் வருடம் தெய்வத்தின் தெய்வம் என்ற திரைப்படத்தில், பாடகி பி.சுசிலா பாடிய நீ இல்லாத உலகத்திலே என்ற திரைப்பட பாடலை பாடினார்.

stalin

அதேபோல, ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியத்தை 3 கோடியாக அதிகரித்தும், ஆராய்ச்சி மையத்தின் நூலகத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்துள்ளார் முதலமைச்சர்.