BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நடுரோட்டில் புகைவிட்டு, பயர்விட்ட இ-ஸ்கூட்டர்.. கண்ணீரில் உரிமையாளர்..!
சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி அருகாமையில், தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவர் இன்று காலை ஓகினோவா என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென ஸ்கூட்டரில் புகை வந்து, தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் உடனடியாக தனது ஸ்கூட்டரை நிறுத்திய சதீஷ், அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அதனை தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர் இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தற்போது பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பேட்டரி வாகனங்கள் தொடர்ந்து பல இடங்களில் எரிந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.