தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெளுத்துகட்டவிருக்கும் கனமழை! அறிவிக்கப்பட்ட ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெளுத்துகட்டவிருக்கும் கனமழை! அறிவிக்கப்பட்ட ஆரஞ்ச் அலர்ட்!


orange alert for rain


தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து கொண்டு இருக்கிறது. 

இந்தநிலையில் சென்னையில் அதிகாலையில் கனமழை பெய்தது. கோயம்பேடு, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

orange alert

இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்துவருவதால் தமிழக விவசாயிகள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.