தமிழகம்

சுஜித்தை மீட்க வருகிறது ராட்சச ரிக் இயந்திரம்! மிகுந்த நம்பிக்கையுடன் மீட்புக்குழு.

Summary:

ONGC Rig machine coming to save sujith

தமிழகமே நாளை சந்தோசத்துடன் தீபாவளி கொண்டாட இருக்கும் நேரத்தில் திருச்சி மாவட்டம் மனப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்ததும், கடந்த 30 மணி நேரமாக போராடியும் குழந்தையை மீட்க முடியாமல் தவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் கருவி, கோவையை சேர்ந்த மீட்பு குழு, ஐஐடி அங்கீகரித்த நவீன தொழில்நுட்பம் இப்படி 13 க்கும் மேற்பட்ட மீட்பு குழுக்கள் போராடியும் சுஜித்தை மீட்க முடியவில்லை.

முதலில் 26 அடியில் இருந்த குழந்தை தற்போது 100 அடிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்டக போராடிவருகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ராட்சச ரிக் இயந்திரம் மூலம் 3 மீட்டர் இடைவெளியில் குழிதோண்டப்பட்டு மூன்று வீரர்கள் உள்ளே சென்று குழந்தையை மீட்க திட்டமிட்டுள்னனர்.


Advertisement