தமிழகம்

அதிமுகவினர் ஏற்பாடு செய்த கறி விருந்திற்கு வந்த மூதாட்டி.! நகைக்காக காதையும் சேர்த்து அறுத்த நபர்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள வெட்டன் விடுதியில் அம்மா மினி கிளினிக்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள வெட்டன் விடுதியில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த நிலையில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அதிமுக கட்சியினர் தடபுடலாக கறி விருந்திற்கு ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து வெட்டன்விடுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் உணவு வழங்கப்பட்டது. அங்கு உணவு சாப்பிட நைனான் கொல்லையைச் சேர்ந்த ராமன் எண்பவரின் மனைவி ரெங்கம்மாள் என்ற 67 வயது மூதாட்டி வந்து இருந்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மூதாட்டி காதில் அணிந்து இருந்த தங்க தோட்டை மர்ம ஆசாமி ஒருவன் பறித்து கூட்டத்தோடு, கூட்டத்தில் கலந்து தப்பி விட்டான். 

மர்ம ஆசாமி தங்கதோடை பறித்ததில் மூதாட்டியின் காது அறுந்தது. வலியால் துடிதுடித்த ரங்கம்மாளை அங்கிருந்தோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.


Advertisement