தமிழகம் விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல்: அழிந்துபோன விளையாட்டுகள் மீண்டும் களைகட்டுகிறது!

Summary:

Old games are again developed

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 

       

இந்தநிலையில், அழிந்துபோன பழைய விளையாட்டுகள் அனைத்தும் மீண்டும் எழுந்துள்ளன. கிராமங்களில் பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதால், வேறு வழியின்றி பல்லாங்குழி, தாயம், ஆடு புலி ஆட்டம், பரமபதம் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

அதேபோல் குழந்தைகள் அனைவரும் தற்போதைய காலத்தில் மொபைல் போன்களில் வீடியோக்களை பார்த்து பொழுதை கழித்து வந்த நிலையில், தற்போது ஒரு மாதங்களாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். 


Advertisement