இறப்பிலும் கூட பிரியாத கணவன் மனைவி..! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்..! வெளியான அதிர்ச்சி காரணம்.! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

இறப்பிலும் கூட பிரியாத கணவன் மனைவி..! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்..! வெளியான அதிர்ச்சி காரணம்.!

இறப்பிலும் பிரியக்கூடாது என்பதற்காக வயதான கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தார்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே உள்ளது பெருந்தோட்டம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி(75), இவரது மனைவி பாக்கியவதி(65). மீன்வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்திவந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், மகன்கள் இருவரும் சென்னையில் வேலை பார்த்துவந்துள்ளனர்.

மகளை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் தவித்துவந்துளார் பாக்கியவதி. இதனால் தாய்யை சென்னைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை வழங்கி மீண்டும் கிராமத்திற்கு அழைத்துவந்துள்ளனர் அவரது மகன்கள்.

இருந்தும் கடந்த சில மாதங்களாக பாக்கியவதி உடல்நல குறைவால் அவதிப்படுவந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தம்பதி இருவரும் விஷம் அருந்திய சம்பவம் தெரியவந்ததை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இறப்பிலும் பிரிய கூடாது என்பதற்காக கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo