வெளிநாட்டு பெண்ணிடம் நிர்வாண பூஜை.. ரூ.90,000 மோசடி செய்த ஜோதிடர் கைது.!



Nude ritual in chennai

சென்னையில் ஜோதிடர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி நிர்வாணா பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நிர்வாண பூஜை செய்வதாகக் கூறி, கனடாவைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.90,000 பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஜோதிடர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோ காலில் நிர்வாணமாகத் தோன்றக் கூறிக் கட்டாயப்படுத்தி, அதன் மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Ritual

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட ஜோதிடரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே தலைமறைவாகி குற்றாலத்தில் பதுங்கியிருந்த அந்த ஜோதிடரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: Chennai: இணைபிரியா தோழிகள் விபத்தில் ஒருசேர பலியான சோகம்.. சாப்பிடச்சென்றபோது துயரம்..!

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜோதிடர் மீது தொடர் விசாரணை நடைபெற்று வருவதோடு, இவர் வேறு பெண்களிடமும் இதுபோன்று ஏதேனும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: துணி காய வைப்பதில் தகராறு.. பெண் ஹெல்மட்டால் அடித்துக்கொலை.. சென்னையில் அதிர்ச்சி.!