பள்ளி மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த வட மாநில இளைஞர்கள் கைது!North Indians morphing school girl photo in Chennai

சென்னை கொத்தவால்சாவடி பிள்ளை தெருவை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஒரு செல்போன் எண்ணிலிருந்து அவரது ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வந்துள்ளது. மேலும் நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் உனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளனர்.

chennai

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் இதுகுறித்து முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் எனது மகளின் செல்போன் எண்ணிற்கு அவளை ஆபாசமாக சித்தரித்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மகளிர் போலீசார் அந்த செல்போன் எண்ணை சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தியதில், கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளை திருவை சேர்ந்த ரவி, கிரண் சிங் ஆகியோர் சிறுமிக்கு ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது தெரியவந்தது.

chennai

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமியின் instagram ஐடி மூலம், அவரது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து சிறுமிக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.