இனி ரேஷன் அல்லாத பொருட்களை; ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி வாங்க சொல்ல முடியாது... ஐ பெரியசாமி..!!

இனி ரேஷன் அல்லாத பொருட்களை; ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி வாங்க சொல்ல முடியாது... ஐ பெரியசாமி..!!


no-longer-ration-items-you-cant-be-forced-to-buy-from-r

நியாய விலை கடைகளில் உப்பு டீதூள் போன்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திண்டுக்கல், தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் உப்பு, சோப்பு, போன்ற பொருட்களை வாங்க ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ரேசன் கடைகளில் உப்பு, சோப்பு போன்ற பொருட்களை வாங்க சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை, குட்டத்துப்பட்டி போன்ற ஊர்களில் புதிதாக தொடங்கியுள்ள முழு நேர ரேஷன் கடைகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்;- 

நியாய விலை கடைகளில் உப்பு, சோப்பு போன்ற பொருட்களை வாங்க சொல்லி, ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்களை, ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.