தெரு ஓர கடையில் காய்கறி வாங்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!! வைரல் வீடியோ..



nirmala-seetharaman-bought-vegetables-at-road-side-shop

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரு ஒர கடையில் காய்கறி வாங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நாள் பயணமாக சென்னை வந்துள்ளநிலையில், அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா மற்றும் மெதுவாகக் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான இல்லத்தை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் சென்னை மயிலாப்பூர் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தைக்கு சென்ற அவர், பொதுமக்களுடன் இணைந்து அங்குள்ள தெரு ஓர கடை ஒன்றில் காய்கறி வாங்கினார். நிதி அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட அந்த பகுதி மக்கள், அவரிடம் நலம் விசாரித்தனர்.

நிதி அமைச்சர் காய்கறி கடையில் காய்கறியை பொருக்கி பார்த்து வாங்கிய இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.