தமிழகம்

மாமியாரிடம் புகார் செய்த மருமகன்.! திருமணமாகி 2 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!

Summary:


சென்னை ஆவடி அடுத்த நந்தவனம்மேட்டூர், காந்தி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர்


சென்னை ஆவடி அடுத்த நந்தவனம்மேட்டூர், காந்தி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் திருநின்றவூரில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்துக்கு பிறகு நாகேஸ்வரி அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். மணிகண்டன் மட்டும் திருநின்றவூரில் வேலைக்கு வந்து சென்றார். இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வடி, நந்தவனமேட்டூர் காந்தி தெருவில் வாடகை வீடு ஒன்றில் தனது மனைவி நாகேஸ்வரியுடன் மணிகண்டன் தனிக்குடித்தனம் சென்றார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை மணிகண்டன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஹோட்டல் வேலைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு வீட்டின் உரிமையாளர் காயத்ரி என்பவர் மணிகண்டனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் நாகேஸ்வரி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மணிகண்டனுக்கு தகவல்  தெரிவித்தார். 

இதனையடுத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், நாகேஸ்வரி திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாகவும், பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால், மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரி தனது தோழி மீனாவுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். மணிகண்டன் தனது மாமியாரிடம்  உங்கள் மகள் மீனாவிடம் அடிக்கடி செல்போனில் பேசிவருவதாக புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நாகேஸ்வரியின் தாயார் மீனாவிடம் அடிக்கடி செல்போனில் பேசுவதை தனது மருமகன் கூறுவதை கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நாகேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், நாகேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டே மாதங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறுகிறது.


Advertisement